கற்பக மூலிகைகள்

கற்பக மூலிகைகள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா

ஞாயிறு, 21 ஜூலை, 2013

வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம்



 வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்காகும். இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன.

ரிக் வேதம்

ரிக் வேதம் 2 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது 10 மண்டலங்களாகவும் 1017 சூக்தங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10467 ரிக்குகள் அடங்கியுள்ளன. இரண்டாவது வகையில் இவ்வேதம் 8 அஷ்டகங்களாகவும் அவை 8x8=64 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 85 அனுவாகங்களைக் கொண்டதாகும்.
இதற்குரிய உபநிஷதங்கள் சமிதை, ஐதரேயம், பவாவிருத்த-ப்ராம்மணோபநிஷதம், கௌஷீதகம் என்ற நான்காகும். க்ருஹ்யசூத்ரம், ஆஸ்வலாயன கல்ப சிரௌத சூத்ரம், சாங்கியாயன சிரௌதம் அரண்யகம், ஐதரேயரண்யகம் - இவைகளை உள்ளடக்கியது கௌஷீதகம்.

யஜுர் வேதம்

இந்த வேதம் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது. இவ்வேதம் யாகாதிகளைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ரிக் வேதத்தில் உள்ள அனேக ரிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண யஜுர் வேதம் 7 காண்டங்களாகவும் 44 பிரச்சனங்களாகவும் 651 அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2190 கண்டிகைகள் உள்ளன. யஜுர் வேத மொழிகளுக்குக் கண்டிகைகள் என்று பெயராகும். கிருஷ்ண யஜுரின் உபநிஷதங்களை தைத்ன்யம், மஹா நாராயணம், கடகம், ஸ்வேதாஸ்வதரம், மைத்ராயணம் என்றும் கூறுவர்.
 
சுக்ல யஜுர் வேதம்
 
இந்த வேதம் 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 303 அனுவாகங்கள் உள்ளன. 1549 கண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வேதத்திற்கு 17 சாகைகள் இருக்கின்றன, இவற்றில் மாத்யம்தினம், கண்வம் எனும் இரு சாகைகள் உள்ளன. இதன் உபநிஷதம் பிரகதாரண்யமாகும். சுக்ல யஜுர் வேத சூத்ரம் (தெரியவில்லை) ப்ரமாண நூல் சதபதப்ரமாணமாகும்.
 
சாமவேதம்
 
இசை வடிவமாக விளங்கும் சாமவேதத்தின் வேதமொழிகளுக்கு கானங்கள் என்பது பெயர். பத்து கானங்களைக் கொண்ட தொகுதிகள் தசதிகள் எனப்பட்டன. தசதிகள் கூட்டமைப்பு அத்தியாயங்கள் என்றும் அத்யாயங்களின் கூட்டமைப்பு ஆர்ச்சிகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வேதம் இரண்டு ஆர்ச்சிகங்களாகவும் 30 அத்யாயங்களாகவும் 458 தசதிகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 1549 கானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேதத்திற்கு 1000 சாகைகள் இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளவை கௌதம சாகை, ராணாய சாகை, ஜைமினீய சாகை என்ற மூன்றாகும்.
இந்த வேதத்தின் பிரமாணங்கள் பஞ்ச விம்சம், சப்த விம்சம், சாம விம்சம், ஆர்ஷேயம், தல்வகாரம், வம்சம், தைவதம், கோபதம் ஆக ஏழாகும். உபநிஷதங்கள் சந்தோக்யம், கேன் என இரண்டு. இதற்கான பிரமாண சூத்ரங்கள் அரண்யங்கள் இல்லை. இதன் உபவேதம் இசைமாலையாகிய காந்தர்வமாகும்.
 
அதர்வண வேதம்
 
அதர்வண வேத மொழிகளுக்கு மந்திரங்கள் என்பது பெயர். இவ்வேதத்துள் 5847 மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை 733 வர்க்கங்களாகவும் 111 அனுவாகங்களாகவும் 34 ப்ரபாடங்களாகவும் 20 காண்டங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வேதத்திற்கு சாகைகள் பிப்ப லாதம், தனதம், இளதம், சளநகீயம், ஜாஜலம், ஜலதம், பிரமவதம், தேவதர்சனம், சாரனைவத்யம் எனும் ஒன்பதாகும். இவற்றில் பிப்லாதமும் சௌனகமும் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த வேதத்திற்குரிய பிரமாணங்கள் கல்பசூத்ரங்கள் அரண்யங்கள் ஏதும் இல்லை. உபநிஷதங்கள் முண்டகம், பிரச்சினம், மாண்டூக்யம் என்ற மூன்றாகும். வேதம் பயில்வதை விளக்கிக் கூறும் அங்கநூல்கள் ஆறாகும். சீட்சை, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருத்தம் கல்பம், கல்பசூத்ரம் என்பவையே அவை. சீஷை: சிட்ஷை என்பது வேத மந்திரங்களில் உள்ள மந்திரச் சொற்களை உச்சா¢க்கும் முறைகளை விளக்குவதாகும். இதில் எழுத்து, ஸ்வரம், மாத்திராகாலம் முதலியன விளக்கப்பட்டுள்ளன. பாணிணி இதற்கு விளக்க நூல்களை செய்துள்ளார்.
 
வியாகரணம் என்பது வேதத்தின் இலக்கணத்தை விவாரிப்பதாகும். பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் முதலியோர் வியாகரண விளக்க நூல்கள் செய்துள்ளனர்.

சந்தஸ்என்பது வேதத்தை இசைக்கும் முறையில் எழுத்துக்களின் எண்ணிக்கையை விளக்குவதாகும். வேதத்தில் காயத்ரி, உஷ்ணிக், ஸ்னுஷ்டுப், ப்ருஹதீ, பங்தீ, த்ருஷ்டுப், ஜகதீ எனும் ஏழு சந்தஸ்கள் உள்ளன. இவை வேதத்தினை எப்படி ஏற்றி இறக்கி ஓத வேண்டும் என்பதையும் வேதத்தின் ஒவ்வொரு அடியிலும் வர வேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் வரையறுப்பதாகும். பிங்கல முனிவர் இதற்கு நூல் எழுதியுள்ளார்.

ஜோதிஷம் என்பது வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தை விளக்குவதாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சாந்திகளையும் தானங்களையும் முறைப்படி உரிய காலத்தில் செய்ய வேண்டும். அதற்குக் காலத்தைப்பற்றிய அறிவு அவஸ்யமாகிறது. காலத்தை நிர்ணயிப்பதில் ஜோதிட நூல் துணை செய்கிறது. ஆதித்தன் பாஸ்கர பட்டர் இதற்கு நூல் செய்துள்ளார்.

நிருத்தம்: இது வேத மொழிகளுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் விளக்கம் கூறும் அகராதி போன்றதாகும். இதன் மூலம் வேத வாக்யங்களின் உண்மைப் பொருளை அறிய முடிகிறது. இதற்குப் பாஸ்கரராயர் உரை உள்ளது.
கல்பம் என்பது வேதங்கள் கூறும் மந்திரங்களின் அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்களை வகைப்படுத்திக் கூறுவதாகும். இவை ஸ்ரௌதம், கிருஹ்யம், தர்மம் என மூன்று வகைப்படும்.

மீமாம்சை என்பது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்று இரண்டு வகையாக உள்ளது. பூர்வ மீமாம்சை ஜை மினியால் செய்யப்படுவதாகும். 12 கண்டங்களுடன் 60 அத்தியாயங்களும் பல சூத்திரங்களையும் கொண்டது.
 
வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு அல்லது வேத சாரத்தைக் குறிப்பதாகும். 191 விஷயங்களைப் பற்றி 558 சூத்திரங்களால் இந்நூல் ஆக்கப்பட்டது. இது நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்டவை. இதனை ப்ரம்ம சூத்ரம் என்றும் அழைப்பர். இது வேத வியாசர் இயற்றியது.

நியாயம் என்பது ஒன்றைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை நிறுவும் நூலாகும். இதனை இயற்றியவர் கௌதமர் ஆவர். 537 சூத்ரங்களைக் கொண்டது. ஒரு பொருள், செயல் நிஜமா என்பதை ப்ரமாணம், ப்ரமேயம், சம்சயம், ப்ரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், வாதம் முதலியவற்றால் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று கூறுகிறது.

வைசேஷிகம்: வையத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பிரித்து அதன் குணங்களை ஆராய்ச்சி செய்து அறிவிக்கும் நூலாகும். கணாத முனியால் அருளப்பட்ட இந்நூல் 373 சூத்ரங்களைக் கொண்டது. த்ரிவ்யம் குணம் கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் முதலிய ஆறு வகையாக உணர்த்துவதாகும்.
  வேதபடனம்: வேதத்தைப் பல்வேறு வகையில் ஓதுவதே வேதபடனம் எனப்படும். அவை மூலசமிதை, பதசமிதை, கிரமம், ஜடை, கனம் என்பனவாகும். மூலசமிதை என்பது வேத மந்திரங்களைச் சந்தி சேர்த்துச் சொல்வது. பதசமிதை என்பது பதம் பதமாகப் பிரித்துச் சொல்வதாகும். கிரமம் என்பது ஒரு பதத்தை இன்னொரு பதத்திற்கு முன்னும் பின்னும் சேர்த்துச் சொல்வதாகும். ஜடசம்ஹிதை பதங்களைச் சேர்த்துப் பிரித்துச் சொல்வதாகும் (ஜடை பின்னுவது போல்). வேதம் பயிலும் மாணவர்கள் நிலையாகத் தங்கிப் பயின்ற இடங்கள் கடிகை எனப்பட்டன. காஞ்சீபுரம், சோழங்கிபுரம் முதலிய ஊர்களில் கடிகைகள் இருந்ததை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.


மந்திர வித்தைகள் வேறு கண்கட்டி வித்தைகள் வேறு

             
  வெரும்
கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்                   மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.



                  ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பலலாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.
                  நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.
                  வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்
                  இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.
                  உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.
                  நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.
                  மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,
                  நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.
                  இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.
                  இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.
                  நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.
                  மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.
                   மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.

சனி, 20 ஜூலை, 2013

வேத சார்புடைய நூல்கள், வேத சார்பற்ற நூல்கள்

கி.பி. 413-ஆம் ஆண்டில் முக்கியமான பௌத்த ஆகமங்கள் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. அங்குள்ள புத்த மடாலயங் களில் இன்றளவும் அவை பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. தீர்க்க ஆகமம் மத்தயம ஆகமம் ஈக்கோட்டர ஆகமம் சம்யுக்த ஆகமம் யோக நூல்களை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். வேத சார்புடைய நூல்கள். வேத சார்பற்ற நூல்கள். வேதசார்புடைய யோக நூல் கள் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவை வேதங்களின் அடிப்படையில் உருவானவை அல்ல. சில வேத சார்புடைய யோக நூல்களில், வேதங்கள் கூறும் கருத்துகளுக்கு எதிரான சில கருத்து கள்கூட உள்ளன. நாம் தந்திர யோக நூல்கள் எனக் கருதும் பல நூல்களும் வேத சார்பற்றவையாகவே உள்ளன. இவை வேதங்களை உன்னதமானவை என்று கருதுவதில்லை ஆதி காலத்தில் தந்திர யோக சூத்திரங் கள் எதுவும் எழுதி வைக்கப்படவில்லை. ஒரு குருவிடமிருந்து அவரது சீடர்களுக்கு வாய் வழியாகவே அவை கற்பிக்கப்பட் டன. மிகவும் பிற்பட்ட காலத்திலேயே இவை தொகுக்கப்பட்டு, நூல் வடிவில் எழுதி வைக்கப்பட்டன. இடைப்பட்ட காலத்தில் பல அரிய தந்திர யோக ரகசியங்கள் அழிந்தும் போயின. தந்திர யோக நூல்களை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். வேத சார்புடைய நூல்கள். வேத சார்பற்ற நூல்கள். வேதசார்புடைய தந்திர யோக நூல்கள் வேதங்களின் மேன்மையை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அவை வேதங் களின் அடிப்படையில் உருவானவை அல்ல. சில வேத சார்புடைய தந்திர யோக நூல்களில், வேதங்கள் கூறும் கருத்துகளுக்கு எதிரான சில கருத்து கள்கூட உள்ளன. இன்று நாம் தந்திர யோக நூல்கள் எனக் கருதும் பல நூல்களும் வேத சார்பற்றவையாகவே உள்ளன. இவை வேதங்களை உன்னதமானவை என்று கருதுவதில்லை! தந்திர யோக நூல்கள் 1. ஆகமங்கள். 2. நிகமங்கள். இவற்றுள் மிக முக்கியமானவை ஆகமங்களே. எனவே அவை குறித்து சற்றே விரிவாகக் காணலாம். ஆகமங்கள் ஆகமங்கள் வேதங்களை ஏற்றுக் கொண்டாலும் அவை வேதங்களிலிருந்து உருவானவை அல்ல. இவை வேதங்களுக்கு முற்பட்டவை என்ற கருத்தும் உள்ளது. பல உபநிடதங்களுக்கு இந்த ஆகமங்களே மூலமாக உள்ளன. ஆகமங்கள் அனைத்துமே அடிப்படையில் நான்கு விதமான செய்திகளையே பேசுகின்றன. 1. ஞானம். 2. யோகம். 3. சடங்குகள், கர்மங்கள். 4. தர்மவிதிகள், ஒழுக்க விதிகள். இவற்றுள் ஞானம், யோகம் ஆகிய இரண்டிற்கு மட்டுமே நமது சித்தர்கள் முக்கியத்துவம் தந்துள்ளனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. இவை தவிர, தந்திரம், மந்திரம், யந்திரம் ஆகியவையும் ஆகமங்களில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நான்கு வகையான ஆகமங்கள் மதத்தின் அடிப்படையில் ஆகமங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. வைணவ ஆகமங்கள். 2. சைவ ஆகமங்கள். 3. சாக்த ஆகமங்கள். 4. பௌத்த ஆகமங்கள். வைணவ ஆகமங்கள் மகாவிஷ்ணுவை முதன்மைக் கடவுளாக வணங்குபவர்கள் வைணவர்கள். அவர்களுக்கான ஆகமங்களே வைணவ ஆகமங்கள். வடநாட்டில் வைணவ மும், தென்னாட்டில் சைவ மும் செழித்து வளர்ந்தன என்பது வரலாறு கூறும் உண்மை. இன்றளவும் வைணவம் வடநாட்டில் தான் அதிகமாகப் பின்பற்றப் படுகிறது. மகாவிஷ்ணுவால் முனிவர்களுக்கும் ரிஷி களுக்கும் நேரடியாகக் கற்பிக்கப்பட்டவையே வைண ஆகமங்கள் என்பது வைணவர்களின் நம்பிக்கை. தற்போது மொத்தமாக 215 வைணவ ஆகமங்கள் உள்ளன. இவற்றுள் ஈஸ்வர ஆகமம், பவிஷ்கர ஆகமம், பரம ஆகமம், பிர்கத் பிரம்மா, ஞானாமிர்த சாரம் போன்றவை மிக முக்கியமான ஆகமங்களாகக் கருதப் படுகின்றன. வைணவ ஆகமங்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட் டுள்ளன. 1. வைகானசம். 2. பாஞ்சராத்ரம்.. 3. பிரதிஷ்டசாரம். 4. விஞ்ஞான லலிதா. இவற்றுள் வைகானசம் என்பது வைகானச முனிவரால் அவரது சீடர்களான மரீசி, பிருகு போன்ற முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டு, பின்னர் அவர்களால் தொகுக்கப்பட்டவை என்ற கருத்து உள்ளது. வைணவ ஆகமங்களில் மிக முக்கியமானது பாஞ்சராத்ரமே என்றும் பாஞ்சராத்ரத்திலும் ஏழுவகை உண்டு. 1. பிரம்ம பாஞ்சராத்ரம். 2. சைவ பாஞ்சராத்ரம். 3. கௌமார பாஞ்சராத்ரம்.. 4. வசிஷ்ட பாஞ்சராத்ரம். 5. கபில பாஞ்சராத்ரம். 6. கௌதமிய பாஞ்சராத்ரம். 7. நாரத பாஞ்சராத்ரம். சைவ ஆகமங்கள் சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்ட மதம்- சைவமதம். வட நாட்டில் வைணவமும் தென்னாட்டில் சைவமும் பிறந்து வளர்ந்தன. தென்னாடு முழுவதும் சைவம் தழைத் திருக்கிறது. வடநாட்டிலும் காஷ்மீர் பகுதியில் சைவ மதம் தொன்றுதொட்டே வழக்கில் உள்ளது. இதை காஷ்மீரத்து சைவ நெறி (அத்வைதம்) என்பார்கள். தென்னாட்டு சைவ நெறிக்கு "சைவ சித்தாந்தம்' என்றும் பெயருண்டு. இந்த இரு பெரும் பிரிவுகளைத் தவிர, வேறு சில சிறுசிறு சைவ நெறிக் குழுக்களும் இந்தியாவில் உள்ளன. காபாலிகர்கள் காளாமுகர்கள் பாசுபதையர்கள் கணபதியேயர்கள் ஆகிய நான்கு வகை கூட்டத்தினர் இவர் களில் முக்கியமானவர்கள். இவர்கள் பெரும் பாலும் வடநாட்டிலேயே காணப்படுகிறனர் இவர்களது வழிபாட்டு முறைகளும், தந்திர யோக முறைகளும் சைவ சித்தாந்த முறைகளிலிருந்தும், காஷ்மீரத்து சைவ நெறியிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவை. பெரும்பாலும் இவர்கள் வாம சார முறைகளையே பின்பற்றுகின்றனர். சைவ ஆகமங்கள் நான்கு பெரும் பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. காபாலா ஆகமங்கள். 2. காளாமுக ஆகமங்கள். 3. பாசுபதா ஆகமங்கள். 4. சைவ ஆகமங்கள். இவற்றுள் கடைசி பிரிவான சைவ ஆகமங்களே பெரும்பாலும் "சைவ ஆகமங்கள்' என ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காஷ்மீரத்து சைவம், தென்னாட்டு சைவ சித்தாந்தம் ஆகிய இரண்டிற்குமே இவை பொதுவான ஆகமங்களாகும். சைவ ஆகமங்கள் ஆண்- பெண் இருவருக்கும் பொதுவானவை. அனைத்து சாதியினருக்கும் உரியவை. (வைணவ ஆகமங்கள் உயர் சாதி வைணவர்களுக்கு மட்டுமே உரியவை. சூத்திரர்கள் அவற்றைக் கற்றுக்கொள்ள முடியாது.) சைவ ஆகமங்கள் அனைத்துமே கலியுகத்திற்கானவை என்ற குறிப்பும் இந்த ஆகமங்களில் காணப்படுகின்றன. தென்னாட்டு சைவ சித்தாந்தம் கூறும் தந்திர யோகமே நமது சித்தர்களின் வாழ்க்கை நெறியாக இருந்தது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். சைவ ஆகமங்களின் இரு பிரிவுகள் சைவ ஆகமங்கள் மொத்தம் 28 உள்ளன. இவற்றுள் முதல் பத்து ஆகமங்களை சிவபேத ஆகமங்கள் என்றும்; மீதமுள்ள 18 ஆகமங்களை ருத்ரபேத ஆகமங்கள் என்றும் அழைக் கிறார்கள். சிவபேத ஆகமங்கள் 1. காமிகா ஆகமம். 2. யோகஜா ஆகமம். 3. சிந்தியா ஆகமம். 4. காரணா ஆகமம். 5. அஜிதா ஆகமம். 6. தீப்தா ஆகமம். 7. சூட்சும ஆகமம். 8. சகஸ்ரக ஆகமம். 9. அம்ஷீமத் ஆகமம். 10. சுப்ர பேத ஆகமம். ருத்ர பேத ஆகமங்கள் 1. விஜய ஆகமம். 2. நிஷ்வாச ஆகமம். 3. சுயம்புவ ஆகமம். 4. அனல ஆகமம். 5. வீர(பத்ர) ஆகமம். 6. ரௌரவ ஆகமம். 7. மகுட ஆகமம். 8. விமல ஆகமம். 9. சந்திரஞான (சந்திரஹாச) ஆகமம். 10. முகபிம்ப ஆகமம். 11. புரோகித (உட்கிட) ஆகமம். 12. லலித ஆகமம். 13. சித்த ஆகமம். 14. சந்தான ஆகமம். 15. சர்வோட்க (நரசிம்ம) ஆகமம். 16. பரமேஷ்வர ஆகமம். 17. கிரண ஆகமம். 18. வதுல (பரகித) ஆகமம். மேற்சொன்ன 28-ம் சைவ ஆகமங்களாகும். சைவ ஆகமங்களுக்கு பல உப ஆகமங்களும் உள்ளன. சாக்த ஆகமங்கள் தற்போது வழக்கில் இருக்கும் தந்திர யோக நூல்களில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சாக்த ஆகமங்களே! தந்திர ஆகமங்கள் என்றால் அது சாக்த ஆகமங்களையே குறிக்கும் என்ற கருத்தும் உள்ளது. இறைவனை சக்தி
வடிவமாக ஆராதனை செய்பவர்கள் சாக்தர்கள். சக்தியே அகிலத்தின் ஈஸ்வரி என்பது சாக்த மதத்தின் அடிப்படைக் கொள்கை. சாக்த மகத்தினர் இறைவியை பல உருவங்களில்- பெயர்களில் வழிபடுகின்றனர். சக்தி, காளி, தாரா, தேவி, பைரவி, திரிபுரசுந்தரி, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, அம்பிகை, குப்ஜிக மாதா என பல பெயர்கள்- பல உருவங்கள். இந்த ஒவ்வொரு உருவமும் பெயரும் பிரபஞ்ச சக்தியின் வெவ்வேறு கூறுகளின் உருவகங்களே! சாக்த மத ஆகமங்கள் பெரும்பாலும் சிவன்- பார்வதி உரையாடல்கள் சிவன் குரு- பார்வதி சிஷ்யை அல்லது பார்வதி- சிவன் உரையாடல்கள் பார்வதி குருவாகவும், சிவன் பாடம் கேட்கும் சிஷ்யனாகவும் நடையிலேயே அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் புராணங்களை ஒத்த செய்யுள் நடையிலேயே உள்ளன. சாக்த ஆக மங்கள் வைணவ ஆகமங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. ஆனால் சைவ ஆகமங்களுக்கு நெருக்கமானவை. சாக்த ஆகமங்களில் காணப் படும் பல கருத்துகள் சைவ ஆகமங்களிலிருந்து பெறப்பட்டவை என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சாக்த ஆகமங்கள் மொத்தமாக 77 உள்ளன. இவற்றுள் முக்கியமானவை என கீழ்கண்டவற் றைக் குறிப்பிடலாம். மகா நிர்வாண தந்திரம். பிரம்மி தந்திரம். குலர்ணவ தந்திரம். குலசாரம். பிரபஞ்சசாரம். தந்திரசாரம். தோடாலா தந்திரம். குப்ஜிக தந்திரம். நில ஆகமம். காயத்ரி தந்திரம். யோகினி தந்திரம். மகா மாயா தந்திரம். தேவிபாத தந்திரம். ருத்ர யாமளை. பிரம்ம யாமளை விஷ்ணு யாமளை. இவற்றுள் கடைசி மூன்றும் யாமளைகள் என்று பெயர் கொண்டிருந்தாலும், சாக்த மதத்தினர் அவற்றையும் ஆகமங்கள் என்றே வகைப்படுத்தியுள்ளனர்